-
முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
3. 3. 1.1 முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு
இருக்க வேண்டிய தகைமைகள்.
இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
16 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்.
3. 3. 1.2 முதன்முறை அடையாள அட்டை பெறுவதற்கான
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள். :-
நிரப்பப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்)
பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)
துறவறம் பூண்ட மதகுருவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய அல்லது உபசம்பத சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால் இவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட கடிதங்கள்.
4 வர்ண புகைப்படங்கள் (13/8 x 7/8 அங்|)
முத்திரைக் கட்டணம்
• 16 தொடக்கம் 17 வயதுவரையான விண்ணப்பதாரிகட்கு 3 ரூபா முத்திரை
• 17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகட்கு 13 ரூபா முத்திரை.
திருமணமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருடன் சேர்க்கவிரும்பின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.
தொழில்பற்றி குறிப்பிட வேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3மாதத்துக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகள் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
உதா :- மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற தொழிற்றகைமை தொடர்பில் பட்டதாரிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விலாசம் எழுதப்பட்ட 30 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை (அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதும் சொந்த விலாசத்துக்கு அதனை தபாலில் அனுப்புவதற்காக). -
அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்
அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்
அடையாள அட்டையை திருத்துவதற்கான காரணங்கள்
• முதன்முதல் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆளின் தற்போதைய உருவமும் வித்தியாசப்படல்.
• பெயர் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்படல்.
• வசிப்பிடம் மாறியதால் ஏற்பட்ட விலாச மாற்றம்.
• தொழில் மாற்றத்தினால் அல்லது தற்பொழுது செய்யும் தொழில் வேறுபடுவதால் தொழிலின் பெயரைச் சேர்த்தல்.
• முதல் அடையாள அட்டையில் குறிப்பிட்ட விடயங்கள் தெளிவற்றிருத்தல்.
• பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை பழுதாகியமை அல்லது சிதைந்து போயிருத்தல்.
• 1972 - 1974 காலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இப்பொழுது செல்லுபடியாகாதாகையால் புதிய அடையாள அட்டைகள் வழங்குதல்.
அட்டையை திருத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
• ஆட்பதிவுத்திணைக்கள வீ (8) ம் இலக்க விண்ணப்பப்படிவம் (இளஞ்சிவப்பு நிறம்/சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட படிவம்)
• பழைய அடையாள அட்டை.
• 4 வர்ணப் புகைப்படங்கள் (13/8 X 7/8 அங்|)
• தொழில் குறிப்பிடப்படவேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3 மாதங்களுக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகளைப் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். உதா - மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்றோர் தொழில்சார் தகைமைகள் தொடர்பாக பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.
• 15 ரூபா பெறுமதியான முத்திரை.
• அடையாள அட்டை இலக்கம் பாவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையில் இலக்கம் தெளிவில்லாமல் இருப்பின்)
• அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயர், பிறந்ததிகதி பற்றிய விபரங்கள் மாறுபட்டு அல்லது தெளிவில்லாமல் இருந்தால் பிறப்புச் சான்றிதழ், உத்தேச வயதுச் சான்றிதழ்களின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி அல்லது வெற்றுவிடை ஆவணத்துடன் மாற்று ஆவணங்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.
• விவாகமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருக்கு முன் சேர்க்க வேண்டியிருந்தால் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.
• பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
• திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
• கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால், இவர்கள் சமய குருமார்கள், என்பதை உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட கடிதங்கள்.
-
காணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்
காணாமல்போன அடையாள அட்டைக்காக மற்றுமோர் அடையாள அட்டையைப் பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:-
• அடையாள அட்டை காணாமற் போனமை தொடர்பாக பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
• ஆட்பதிவுத் திணைக்களத்தின் வீ 07ம் இலக்க விண்ணப்பப்படிவம் (பச்சை நிறத்திலான அல்லது பச்சை நிற எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டது)
• பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்கான பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயதுச் சான்றிதழின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதி அல்லது பெறுபேற்றுக் குறிப்புடனான வேறு ஆவணம்.
• தொழிலைக் குறிப்பதற்கான சேவைச் சான்றிதழ் (மூன்று மாத காலத்துள் பெறப்பட்ட): தொழிற்தகைமைகள் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். உதா :- மருத்துவர், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள் போன்றோர் தமது தொழிற்றகைமைகள் தொடர்பான பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை வழங்குதல் வேண்டும்.
• 15 ரூபா முத்திரை.
• 4 வர்ணப் புகைப்படங்கள் (13/8x7/8 அங்|)
• அடையாள அட்டை இலக்கம் பாவித்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையின் நிழற்படப்பிரதி, வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம்)
• முதன் முதலில் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள். :-
• ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்)
• பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)
• பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
• திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
• கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய குருமார்கள், இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால் அவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்தியும் வழங்கப்பட்ட கடிதங்கள்.
(காணாமல் போன அடையாள அட்டைக்காக வேறு அடையாள அட்டையைப் பெறுவதற்கு, அதற்கான விண்ணப்பப்படிவத்தின் விபரங்கள், பழைய அடையாள அட்டையிலுள்ளவாறே குறிப்பிடப்படல் வேண்டும்.
-
ஒருநாள் சேவை
05. ஒருநாள் சேவை
திடீர்த் தேவை கருதி விரைவாக அடையாள அட்டைகளைப் பெறவிரும்புவோருக்காக ஒரு நாளைக்குள் அடையாள அட்டைகளை வழங்கும் விரைவுச் சேவை (ஒருநாள் சேவை) 01.09.2003 ஆந் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு விண்ணப்பத்தின் பேரில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமாக 500 ரூபா அறவிடப்படும். எவ்வாறாயினும் 20 வயதுக்கு மேற்பட்டடோரின் விண்ணப்பங்கள் (ஆ.ப.தி வி.01) இவ் ஒருநாள் சேவையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
இச்சேவையின் கீழ் விண்ணப்பங்களை விண்ணப்பதாரி திணைக்களத்தில் நேரில் சமர்ப்பித்தல் வேண்டும். அவ்வாறு நேரில் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பங்களில் உறவு முறையை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுள்ள உறவினர் ஒருவர் (தாய்/தந்தை/குழந்தைகள்) அல்லது விண்ணப்பதாரியின் அதிகாரமளிக்கும் கடிதத்தையுடைய ஒருவர் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
சாதாரண சேவையின் கீழான விண்ணப்பங்களைப்போலவே ஒருநாள் சேவையின் கீழான கிராமசேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுக்கு அவருடன் பிரதேச செயலாளரின் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரினால் மேலொப்பம் இடப்படல் அவசியம்.
-
வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
- கிராம அதிகாரியினால் பிறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
- பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும்.
- சரியாக பூரணப்படித்தப்பட்ட பிரதிக்கினை பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு பெற்று தரவும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிறப்பு நிகழ்ந்த பொழுது அருகில் இருந்த நபர்
- பாதுகாவலர்
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல் விபரத்தினை பார்க்க.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
-
கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு பிறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
- வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.
-
பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பினை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
- வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
- 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.
-
தனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்படுகிறது.
- பிறப்பு தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்தால் அத்தகையை பிறப்பை அப்பிரதேச பதியவாளருக்கு அறிவித்தல்.
- பிறப்பைப் பற்றிய தகவல்களை வழங்க பொருத்தமான நபர்கள்
- தந்தை
- தாய்
- பிறப்பு நிகழ்ந்தபோது சமூகமளித்திருந்த நபர்
- அந்த வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி
- பிறப்பை அறிவிப்பதற்காக பிறப்பு, இறப்பு பதிவாளரிடமிருந்து தகுந்த வெளிப்படுத்தல்படிவத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட வெளிப்படுத்தல்.
- பிறப்பு நிகழ்ந்தததை நிரூபிப்பதற்கு வைத்தியசாலையிலிருந்து வழங்கப்பட்ட ஆவணம்.
- பிறப்பு நிகழ்ந்து 3 மாதங்களுக்குள் பிறப்பை இலவசமாகப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
- பிறப்புச் சான்றிதழ் பிரதியொன்று தகவல் அளிப்பவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
- மேலதிக தகவல்களுக்கு உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளரைச் சந்திக்கவும்.
-
பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழந்த பிறப்பை பதிவுசெய்தல்
- பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் தோட்ட அதிகாரிக்கு அறிவித்தல்
- தகவல் அளிக்க வேண்டிய நபர்கள்
- தந்தை
- தாய்
- பிறப்பின்போது சமூகமளித்திருந்த ஒரு நபர்
- தோட்ட அதிகாரி விண்ணப்பத்தை சான்றுப்படுத்தி மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பிவைப்பார்.
- மாவட்ட பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் தோட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
- தகவல் அளித்தவர் தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
-
வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- நிரந்தர இலங்கை பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- பிறப்பினை பதிவுசெய்வது பிறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள நிரந்தர இலங்கை தூதுவர்/ நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் ஆகும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிள்ளையின் பாதுகாவலர்
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆவணங்கள்
- 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- வெளிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாத தற்பொழுது நிரந்தரமாக இலங்கைக்கு வந்திருக்கும் நபரின் பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியும்.
அதற்காக தேவையான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவேட்டறையின் உதவி பதிவாளர் நாயகம் அவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் தொலைலபேசி இலக்கம்: +94 112 329 773 or +94 112 433 075
-
காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்கள் பிறப்பை பதிவுசெய்யாமலிருந்தால் அதை பதிவுசெய்யலாம்.
- பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு வெளிப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இதற்குத் தகுதியானவர்கள்
- இதில் ஆர்வம்காட்டுகின்ற எவரேனும் ஒருவர்
- பெற்றோர்களில் ஒருவர்.
- அறவிடப்படும் கட்டணம் ரூ.50.00
- பிறப்பு நிகழ்ந்ததிலிருந்துஒரு வருடத்திற்கு வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
- பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
- வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ்
- பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
- வெற்று பெறுபேற்று தாள்
- பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
- வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- சுகாதார மருத்துவ தாதியின் பிறப்பு பதிவேட்டின் பிரதி
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களில்,
- சுகாதார அபிவிருத்தி பதிவேடு
- ஞானஸ்னான சான்றிதழ்
- பாடசாலை அனுமதி பதிவேட்டின்/மாணவர் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட நலனோம்பல் அதிகாரியின் அறிக்கை
- பிறப்பு நிகழ்ந்த திகதியை ஒட்டி நேரம் கணிக்கப்பட்ட ஜாதக பதிவின் பிரதி
- இந்த ஆவணங்களில் எதுவும் இல்லாவிட்டால், அறிந்த விடயங்களை வெளிப்படுத்தும் ஒரு சத்திய கடதாசி.
-
அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கல்
- பிறப்பினை பதிவுசெய்ய முடியாத வயது 14ஐ விட குறைந்த பிள்ளைகள் சம்பந்தமாக அனுமான வயதுச் சான்றிதழ் வழங்கப்படும்.
- அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கப்படுவது,
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள்
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
- பிள்ளை காப்பகத்தின் நிருவாகியின் சத்தியக்கூற்று
- அரசின் வைத்திய அலுவலர் மூலம் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
- பிள்ளை சம்பந்தமான விபரத்தினை உள்ளடக்கிய வேறு ஆவணங்கள் (இருந்தால் மட்டும்)
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
- பாதுகாவலரின் சத்தியக்கூற்று
- பிள்ளை பாதுகாவலரின் பாதுகாப்பில் உள்ளார் என உறுதிப்படுத்தக்கூடிய
- கிராம அலுவலரின் சான்றிதழ் அல்லது
- சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அலுவலரின் சான்றிதழ் அல்லது
- சமூக சேவைகள் திணைக்களத்தின் சான்றிதழ் அல்லது
- பொலிஸ் பரிசோதகரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
- அரசின் வைத்திய அதிகாரியினால் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
- சுகாதார வளர்ச்சி குறிப்பின் பதிவேடு
- பிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலையில் அனுமதித்த பதிவேட்டின் பிரதி
- மேலதிக விபரங்கள் தேவைப்படின் அருகில் உள்ள பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்திக்கவும்.
-
பிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்
- பிறப்பு பதிவு செய்தல் குறிப்பு,
- 01 வது கூட்டின் விபரம் (பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்)
- 03 வது கூட்டின் விபரம் (பால்)
- 05 வது கூட்டின் விபரம் (தாயின் விபரங்கள் அனைத்தும்)(பிறப்பினை பதிவுசெய்ததன் பின் தாயின் பெயர் மாற்றப்பட்டிருந்தால், பெயர் மாற்றம் இந்த ஒதுக்கீட்டின் கீழ்செய்ய முடியாது)
- 09 வது கூட்டின் விபரம் (தகவல் அளிப்பவரது விபரங்கள்) திருத்தப்பட முடியும்.
- பிரதிக்கினை பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது
- பிறப்புச்சான்றிதழுக்குரிய நபர்
- தந்தை அல்லது தாய்
- சட்டமுறையான பாதுகாவலர்
- பிறப்புச் சான்றிதழில் உள்ள ஏதாவது விபரம் பற்றி அதிருப்தியடைந்த நபர்
- பிரதிக்கினைக்கு வழங்கப்பட வேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
- பிரதிக்கனை திருத்த உத்தேசித்த பிறப்புச்சான்றிதழின் உறுதிப்படித்தப்பட்ட பிரதியினை கட்டாயம் இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்காக எழுத்து மூல சாட்சியங்ளை சமர்ப்பிக்க.
- பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்கள் சில கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.,
- பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
- பிள்ளை பெயர்ப்பட்டியல்/ சகோதர பெயர்ப்பட்டியல்
- தந்தை/ தாயின் பிறப்புச்சான்றிதழ்
- பெற்றோரின் விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
- விவாகத்தினை பதிவு செய்ததன் பின் பிறந்த பிள்ளை அல்லாவிடில், விடயத்திற்குரிய பிள்ளைக்கு மூத்த அல்லது இளைய பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
- வைத்தியசாலை, மகபேற்று இல்லம் என்பவற்றில் உள்ள குறிப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகபேற்று தாதியின் ஆவணத்தின் பிரதி.
- மாணவர் அறிக்கை, பிள்ளையினை பாடசாலையில் அனுமதித்தல் ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
- விடயதாரி மற்றும் பெற்றோரின் பெயரினை உள்ளடக்கிய வாக்காளர் பெயர் பட்டியல்
- தந்தை இறந்திருந்தால் அவரின் இறப்புச்சான்றிதழ்
- பிறப்பு பதிவு செய்தல் குறிப்பு,
















